உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதல்: 28 பேர் பலி

மாஸ்கோ: பிப்.5
ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைனில் உக்ரைன் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 3 ஆண்டை நெருங்கும் உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வரவில்லை. போர் தொடங்கியதிலிருந்து 6,500க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 3,500க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைனின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது நீடிக்கிறது.ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தற்போது தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் லிசிசான்ஸ்க் நகரில் பேக்கரி மீது உக்ரைன் ராணுவம் நேற்று குண்டுமழை பொழிந்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 28 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய 10 மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.