உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி மாநகராட்சி தேர்தல்கள் : முதல்வர்

பெங்களூர்: ஜூன். 2 – இப்போதிலிருந்தே மாநகரட்சி தேர்தல்களுக்கு தயாராக வேண்டும். . உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தேர்தல்கள் நடக்க உள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பி ஜே பி அலுவலகத்தில் இன்று கட்சியின் மாநில தலைவர் நளீன் குமார் பாட்டில் தலைமையில் பெங்களூரு நகர எம் எல் ஏக்கள் , மற்றும் மேலவை உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று மாநகராட்சி தேர்தல்கள் குறித்து மாவட்ட தலைவர்கள் , மற்றும் எம் எல் எங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தவிர பெங்களூர் மாநகராட்சி தேர்தல்களுக்கு தயாராவது குறித்தும் ஆலோசனைகள் நடத்தியுள்ளோம். இப்போதிலிருந்தே மாநகராட்சி தேர்தல்களுக்கு தயாராக வேண்டும் . கட்சி சார்பாக வாக்கு சாவடி மட்டத்தில் கட்சி ஒருங்கிணைக்கப்படும். வளர்ச்சி பணிகளையும் இப்போதிலிருந்தே செய்ய துவங்க வேண்டும். மழைக்காலம் துவங்குவதற்கு முன்னரே திட்டப்பணிகளை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் . விஷன் தகவல் படம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளோம். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் சேர முடிவு எடுக்கப்பட்டுள்ளது தேர்தல் விஷயத்தில் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து விஷன் ஆவணம் தயார் செய்யப்படும். இது குறித்து எம் எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஏற்கெனவே தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர் என முதல்வர் பிசைவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.