உடலமைப்பு பற்றி விமர்சனம்… பதிலடி கொடுத்த பிக்பாஸ் அபிராமி


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம், உடலமைப்பு பற்றி வரும் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள், குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அபிராமியின் உடல் அமைப்பு குறித்து ட்ரோல் செய்பவர்கள், ஆபாசமாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
“நான் குண்டாகிவிட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.”
“இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம்.” என்று அபிராமி கூறி உள்ளார்.