உடல்நிலை குறித்து உபேந்திரா விளக்கம்

பெங்களூர் : நவம்பர். 24 – திரைப்பட படப்பிடிப்பின் போது மூச்சு திணறல் ஏற்பட்டு நடிகர் உபேந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் தற்போது அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெலமங்களாவில் உள்ள மோகன் பி கெரே படப்பிடிப்பு தளத்தில் உபேந்திரா நடித்து இயக்கிவரும் ‘ யு ஏ ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மூச்சு பிரச்சனை ஏற்பட்டதில் உபேந்திரா ஹர்ஷா ராமய்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நடிகர் உபேந்திராவுக்கு மூச்சு தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தூசி ஒவ்வாமையால் இவருக்கு மூச்சு பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். உபேந்திராவின் உடல் நிலையில் பிரச்சனை என்ற தகவல்கள் கசிந்த உடனேயே வீடியோ வாயிலாக நடிகர் உபேந்திரா விளக்கம் அளித்துள்ளார். திரைப்பட படப்பிடிப்பின்போது மூச்சு தொந்தரவு ஏற்பட்டதுடன் தூசி பிரச்சனையால் இது நேர்ந்ததாகவும் இது குறித்து எவ்வித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் , நான் முழு ஆரோக்கியத்துடன் உள்ளேன் நேற்றும் அவர் வீடியோ வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.