உடல் முழுக்க ஆயுதம்! உக்ரைன் படைகளை நோக்கி ஓடிய இந்தியர் கைது

டெல் அவிவ்: அக். 8
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பல ஆண்டுகளாகவே போர் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ராணுவம் இப்போது இந்தியர் ஒருவர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டது ஏன்.. இதன் பின்னணி என்ன.. உக்ரைன் போர்க் களத்தில் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆண்டுக் கணக்கில் போர் நீண்டு வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பும் முயன்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உக்ரைன் போர் இதற்கிடையே உக்ரைன் நாட்டில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய ராணுவத்திற்காகச் சண்டையிட்டதாகச் சொல்லி 22 வயது இந்தியர் ஒருவரை உக்ரைன் படைகள் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நபர் குஜராத் மாநிலம் மோர்பியைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்று உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்தியா வெளியுறவுத் துறை இதுவரை இந்தச் செய்தியை உறுதி செய்யவில்லை. விவரங்களைச் சரிபார்த்து வருவதாக மட்டும் இந்திய அதிகாரிகள் கூறினர்.
வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் பேசுகையில், “இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். உக்ரைன் தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வத் தகவலும் இன்னும் எங்களுக்கு வரவில்லை” என்று கூறினர்.உக்ரைனின் “தி கீவ் இன்டிபென்டன்ட்” வெளியிட்ட அறிக்கையின்படி, ஹுசைன் பல்கலைக்கழகப் படிப்புக்காக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு உக்ரைனுக்கு எதிராகப் போரிட ரஷ்ய ராணுவத்தால் சேர்க்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஹுசைனை பேசச் சொல்லி உக்ரைன் ராணுவம் வீடியோவும் எடுத்து வெளியிட்டுள்ளது.. அந்த வீடியோவில், ரஷ்யாவில் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் தனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இந்தியர் சொல்வது என்ன! சிறையில் இருந்தபோது,​ரஷ்ய ராணுவத்திற்காகப் போரிட்டால்.. இனி சிறையில் இருக்க வேண்டாம் என்ற ஒரு ஆஃபரை வழங்கியுள்ளனர். இதை அவர் ஏற்றுக் கொண்டு ரஷ்யாவுக்காகச் சண்டையிடப் போர்க்களத்திற்கு வந்துள்ளார். அந்த நபர் மேலும் கூறுகையில், “நான் சிறையில் இருக்க விரும்பவில்லை, அதனால் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கைக்காக’ (உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ஏனென்றால் நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன். ரஷ்யப் படைகளால் எனக்கு 16 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.. அக்டோபர் 1ம் தேதி முதல் போர் களத்திற்கு அனுப்பினார்கள். முதல் மூன்று நாட்கள் உக்ரைன் படைகளுக்கு எதிராகச் சண்டையிட்டேன். அதன் பிறகு எனது தளபதியுடன் சண்டை ஏற்பட்டது. இதனால் உக்ரைன் படைகளிடம் சரணடைந்தேன்.