உணவில் கரப்பான் பூச்சி – ஓட்டல் மீது வழக்கு பதிவு

பெங்களூர், ஜன.6-
பெங்களூர் ராஜ்பவன் சாலையில் ஹோட்டல் ஒன்றில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால் ரகளை ஏற்பட்டது. ஹோட்டல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது: பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஷீலா தீபக். இவர் தனது உதவியாளருடன் ராஜ் பவன் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார் .
அங்கு ரொட்டி, பன்னீர் கறி, ஆர்டர் கொடுத்துள்ளார். ஹோட்டல் சர்வர் அவர் கேட்டதை கொண்டு வந்து அளித்துள்ளார். அவர் அளித்த குழம்புவில் சிறிய கரப்பான் பூச்சி ஒன்று இருந்தது. இதனை ஷீலா தீபக் பார்த்துள்ளார். இதனால், உணவை சப்ளை செய்தவரை அழைத்து ரகளை செய்துள்ளார்.
குழம்புவை மாற்றி தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் உடனே வழக்கறிஞர் ஷீலா தீபக், உணவு தயாரிக்கும் அறைக்கு சென்றுள்ளார். அது மிகவும் அசுத்தமாக இருந்தது. அதனை படம் எடுத்துள்ளார். இதனை கவனித்த சமையல் காரர்கள் பெண் வக்கீலை தள்ளி தாக்கியுள்ளனர் இது குறித்து ஓட்டல் உரிமையாளரும் தெரிவித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
விரைந்து நடவடிக்கை எடுக்காததால், அவர் போலீஸ் உதவி மையத்தை, நாடி உள்ளார்.
போலீசாரிடம் நடந்த சம்பவத்தை புகாராக தெரிவித்துள்ளார். இதன் பேரில் விபதான் சவுதா போலீஸ் நிலைய போலீசார், விசாரித்து ஐபிசி 352, 341, 504, 506 பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.