உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தீவிரம்

திண்டுக்கல்- நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதியுடன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுமோட்டோ உள்ளிட்ட தனியார் உணவு நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன. கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தையும் உடனடியாக எண்ணி அதில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.
ரொக்கப்பணமாக ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830ம், தங்கம் 1419 கிராமும், வெள்ளி 18,185 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366-ம் கிடைத்துள்ளன.

இது தவிர பட்டு, பரிவட்டம், நவதானியங்கள், வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன

https://www.maalaimalar.com/news/state/2000-rupees-note-life-2-days-work-intensity-of-counting-money-offerings-in-temples-667958