உண்ணாவிரதம் வாபஸ்

மும்பை: பிப். 27: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் என்பவரின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. “எனது உடல்நிலை மோசமாக உள்ளது மற்றும் இந்த கிராமத்துக்கு எனது ஆதரவாளர்கள் வருவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக எனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன்” என மனோஜ் ஜராங்கே விளக்கம் அளித்துள்ளார்.