உண்மைக்கு வெற்றி – ராகுல்

புதுடெல்லி, ஆகஸ்ட் 4-
இன்று இல்லை என்றால் நாளை உண்மை வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது அது தற்போது நிஜமாகி உள்ளது எனது போராட்டம் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நான் என்ன செய்ய வேண்டும், என் வேலை என்ன என்பதில் என் மனதில் தெளிவு இருக்கிறது. எங்களுக்கு உதவிய மக்களுக்கு நன்றி, அவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். என்று ராகுல் காந்தி கூறினார். ராகுலுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது தொடர்ந்து மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தீர்ப்பு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, இது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்றார். மேலும் அவர் கூறும்போது
ராகுல் காந்தி இந்தியாவுக்காக உண்மைக்காகப் போராடுவார். வளர்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார். ராகுல் காந்திக்கு எம்பி பதவியை மீண்டும் சபாநாயகர் வழங்குவது குறித்துபொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.