
மும்பை, செப்.7-
சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து, நாட்டில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு இது போல் பேசியுள்ளார் அவரது கருத்தை யாரும் ஆதரிக்கவில்லை என்று அவர் கூறினார். இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், அது திமுகவின் பார்வையாக இருக்கலாம் அல்லது அவரது தனிப்பட்ட பார்வையாக இருக்கலாம். சுமார் 90 கோடி இந்துக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர், பிற மதத்தினரும் இந்நாட்டில் வாழ்கின்றனர். எந்த மதத்தின் மத உணர்வுகளையும் புண்படுத்த முடியாது.
நாட்டின் நிலைமை மோசமடையக் கூடாது. எதிர்க்கட்சிகளை தாக்க பா.ஜ.க.வுக்கு வெடிமருந்து கொடுக்க கூடாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் அவர் தடுக்க வேண்டும்
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் இந்தியக் கூட்டணி இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் குற்றம்சாட்டி பாஜகவினர் தாக்கி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறார்கள்.சனாதன தர்மத்தை நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். என்று மத்திய அமைச்சர்கள் பலர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாகபதிலளித்த எம்.பி சஞ்சய் ராவத், எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் யாரும் அறிக்கை விடக்கூடாது என்று கூறியுள்ளார்.