உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க ச ஆர்ப்பாட்டம்


தர்மபுரி,ஜன.13,
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, நல்லம்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
மகளிரணி நிர்வாகிகள் தமிழ்மணி, ரஞ்சிதம், மாதவி, ஜெய்சித்ரா, தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினர். இதில் தமிழக முதல்வர் மற்றும் பெண்களை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். இழிவாக பேசிய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.கவினர் கண்டன கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் பூக்கடை முனுசாமி, அரங்கநாதன், முன்னாள் தொகுதி செயலாளர் பச்சியப்பன், கிளை நிர்வாகிகள் முருகன், பிரேம்குமார், செல்வம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் அங்குராஜ், அம்மாசி, தர்மலிங்கம், அருவி உள்ளிட்ட நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.