உத்தரபிரதேசத்தில் கோர விபத்து 6 பேர் பலி

லக்னோ பிப்ரவரி 27
உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹல்டி பகுதியில் உள்ள சுகர் சாப்ரா திருப்பத்தில் இரண்டு கமாண்டர் ஜீப்புகள் மீது பிக்-அப் வேன் மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.