உமேஷ் கத்தி வீட்டிற்கு சென்று ஆளுநர் அனுதாபம்

பெலகாவி : செப்டம்பர் . 14 – மாநிலத்தின் ஆளுநர் தாவர் சந்த் கெலோட் பெல்லத பாகேபாடியிலுள்ள காலம் சென்ற உமேஷ் கட்டியின் வீட்டிற்கு சென்று அவருடைய படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் உமேஷ் கட்டியின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய ஆளுநர் உமேஷ் கட்டியின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தார் . டி சி சி வங்கி தலைவராக இருந்த முன்னாள் எம் எல் ஏ உமேஷ் கட்டியின் சகோதரர் ரமேஷ் கட்டி ஆளுநரிடம் உமேஷ் கட்டி நடந்து வந்த பாதை , மாநில அரசியலில் அவர் செய்துள்ள சாதனைகள் , மற்றும் அவருக்கு இருந்த பொதுநல நோக்கம் ஆகியவை குறித்து ஆளுநருக்கு விவரித்தார். அப்போது ஆளுநர் உமேஷ் கட்டியின் சேவைகள் குறித்து பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது மாநிலங்களவை உறுப்பினரான ஈரண்ணா கடாடி , உமேஷ் கட்டியின் மகன் நிகில் கட்டி உட்பட அவருடைய குடும்ப உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.