உயரப்போகும்.. அரசு ஊழியர்களின் சம்பளம்

புதுடெல்லி:: அக்டோபர் 29-
8வது ஊதியக்குழு நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் நேற்று உருவாக்கப்பட்டது. இந்த 8வது ஊதியக்குழுவிற்கு கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சராசரி சம்பளம் 3 மடங்கு வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஜனவரி 2026-ல் இருந்து 8வது மத்திய ஊதியக் குழு (CPC) அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை, ஃபிட்மென்ட் காரணி 2.57-ல் இருந்து 2.86 ஆக உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-ல் இருந்து ரூ.51,480 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000-ல் இருந்து ரூ.25,740 ஆகவும் உயரும். அத்துடன், அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), பயணப்படி (TA) போன்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். 8வது மத்திய ஊதியக் குழு (CPC) 8ஆவது ஊதியக்குழு உறுப்பினர் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான ரஞ்சன் பிரகாஷ் தேசாய் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். உறுப்பினர் செயலாளராக ஐ.ஏ.எஸ்.அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பகுதி நேர உறுப்பினராக ஐஐஎம் பெங்களூர் பேராசியர் புலக் கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை (8th Pay Commission) நியமிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழு, திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கட்டமைப்புகள் குறித்து 18 மாதங்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
8வது ஊதியக் குழு – ஃபிட்மென்ட் காரணி 8வது ஊதியக் குழுவின் முக்கிய அம்சம், ஃபிட்மென்ட் காரணியின் உயர்வுதான். இது புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக செயல்படுகிறது. தற்போதைய 7வது ஊதியக் குழுவில் இது 2.57 ஆக உள்ளது. 7வது ஊதியக் குழு 2016-ல் அமல்படுத்தப்பட்டபோது, குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. அதேபோல, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500-ல் இருந்து ரூ.9,000 ஆக இரட்டிப்பானது. இந்த வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, ஃபிட்மென்ட் காரணியின் முக்கியத்துவம் தெளிவாகிறது. சம்பளம் எப்படி உயரும்? மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அண்மையில் குறிப்பிட்டதாவது, “சுதந்திர இந்தியாவில் ஏழு ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2016-ல் 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. அதன் காலம் 2026-ல் முடிவடைவதால், அரசு 2025-ன் தொடக்கத்திலேயே புதிய குழு அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.” இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி, 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
2.86 என்ற ஃபிட்மென்ட் காரணி அமலுக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமாக உயரும். உதாரணமாக, லெவல் 1 சம்பளம் ரூ.18,000-ல் இருந்து ரூ.51,480 ஆகவும், லெவல் 18 சம்பளம் ரூ.2,50,000-ல் இருந்து ரூ.7,15,000 ஆகவும் அதிகரிக்கலாம்.