உயர் கல்வி உதவித் தொகை

சென்னை: நவம்பர் 25 – ஒருகால பூஜை திட்ட கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் ரூ.6 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை நேற்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர் கோ.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.