உயிர் தியாகம் செய்த வீரர்குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்

பெங்களூர், டிச.5-
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் வீர மரணம் அடைந்த பெருமைமிக்க வீரர் கேப்டன் பிரஞ்வல் குடும்பத்திற்கு கர்நாடக அரசு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேச பாதுகாப்புக்கு தனது உயிரை பணயம் வைத்து சேவை செய்யும் ஒவ்வொரு வீரர்களின் மீதும் நமக்கு மிகுந்த கௌரவம் உள்ளது.
தியாகி பிராஞ்சலின் தியாகம், வீர மரணம், அடைந்த அவர் குடும்பத்தாருடன் நாம் கைகோர்த்து நிற்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கான நிவாரண நிதி 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மறைந்த வீரரின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும். மறுபடியும் கேப்டன் பிராஞ்சல் அவரின் தேசிய சேவையை கௌரவத்தோடு நினைவில் கொள்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.