உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது சூர்ய கிரண் விமானங்கள் சாகசம்

அஹமதாபாத் : நவம்பர். 17 – இந்திய ராணுவத்தின் சூர்ய கிரண் படையினர் வரும் 19 அன்று இங்கு இந்தியா மற்றும் ஆஸ்திரிலேயா அணிகளுக்கிடையே நடக்க உள்ள உலக கோப்பை இறுதி போட்டி துவங்குவதற்கு முன்னர் முதலில் தங்கள் சாகசங்களை செய்து காட்ட உள்ளனர். இந்த இறுதி போட்டிகள் துவங்குவதற்கு முன்னர் சூர்ய கிரண் விமான படையினர் 10 நிமிடங்கள் பொதுமக்களை தங்கள் சாகசங்கள் வாயிலாக பரவசப்படுத்துவார்கள் என பாதுகாப்பு படை பொது மக்கள் தொடர்பாளர் குஜராத்தில் தெரிவித்துள்ளார். இந்த உலக கோப்பை இறுதி போட்டி குஜராத் மாநிலத்தின் அஹமதாபாதில் உள்ள நரேந்திர மோதி விளையாட்டரங்கில் நடக்கவுள்ளது. இந்த சூர்யா விமானப்படையின் சோதனை நிகழ்ச்சிகள் இன்று மற்றும் நாளை நடக்கவுள்ள. இந்திய அணியினர் ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை நியூசீலாந்து அணியியை வென்று ஒரு நாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதியடைந்தனர். இந்த நிலையில் இந்திய அணியினர் வரும் 19 அன்று நடக்கவுள்ள உலக கோப்பை இறுதி போட்டியில் இரண்டாவது செமி பைனல் போட்டியில் வெற்றிபெறும் ஆஸ்திரேலியா அல்லது தெற்கு ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளனர். வழக்கமாக இந்திய விமான படையின் சூர்யா கிரண் விமானப்படையின் ஒன்பது விமானங்கள் இருப்பதுடன் இவை ஏற்கெனவே நாட்டில் பல பகுதிகளில் தங்கள் சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளன. தவிர 19 அன்று குஜராத்தில் நடக்க உள்ள உங்க கோப்பை இறுதி விளையாட்டுகளின் துவக்கத்துக்கு முன்னர் சூர்ய கிரண் விமானங்கள் 10 நிமிட நேரம் தங்கள் சாகசங்களை நிகழ்த்தி பொதுமக்களை பரவசம் மற்றும் உற்சாகப்படுத்த உள்ளன.