உலகத்தரத்தில் வசதி

சென்னை: நவ. 27: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, யாத்ரிசேவை அனுபந்த் என்ற முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தி, ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு உணவு உள்பட பல்வேறு சேவைகளை உலகத் தரத்தில் வழங்க முயற்சி எடுத்துள்ளது.
ரயில் பயணிகளின் சேவைகளை மேம்படுத்த இந்திய ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், வந்தே பாரத் ரயில்களில் பயணிகளின் பயண அனுபவம் மேலும் உயர உள்ளது.அதாவது, ரயில் பயணத்தின்போது, சேவைகளில் ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் 6 ஜோடி வந்தே பாரத் விரைவு ரயில்களில் யாத்ரி சேவை அனுபந்த் என்ற திட்டத்தை தொடங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஒரு முன்னோடி திட்டமாகும். ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவது, சிறந்த சேவை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.
உணவு, தூய்மைப்பணி: ரயில்வேயின் தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.