உலக அரங்கில் கம்பீரமான வளர்ச்சி – கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை

புதுடெல்லி: ,ஜனவரி 31
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் இன்று கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் குதிரைப்பட சூழ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை ஏந்தியபடி குடியரசு தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் பேசுகையில்,” நாடாளுமன்றத்தில் இன்றைய உரை, எனது முதல் உரையாகும். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்று வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.