உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

புதுடெல்லி: ஏப்ரல். 2 – புதிய வகுப்பின் முதல் நாளில் ஆசிரியை ஒவ்வொருவரையும் தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். நான் விரும்பும் புத்தகங்கள், திரைப்படங்கள், எதிர்காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற எனது லட்சியம் முதற்கொண்டு பலவற்றை உற்சாகமாக எடுத்துச் சொன்னேன். ஆசிரியை என்னுடைய குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பியபோது குரல் தழுதழுத்தது.
எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், என்னை விட மூன்று வயது பெரியவன். சின்னக் குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு ஆட்டிசம் பாதிப்பு என்பதால் மெதுவாகத்தான் கற்றுக்கொள்ள முடியும். பதினாறு வயது நிரம்பிய பின்னும் அவனுக்கு நாங்கள் இன்னமும் பல்தேய்க்க கற்பிக்கிறோம் என்பதையெல்லாம் என் புதிய நண்பர்களிடம் அப்போது சொல்ல மனம் வரவில்லை.
ஆட்டிசம் என்ற வார்த்தையை கேட்டதுமே, அதிபுத்திசாலித்தனமும், கூடவே கொஞ்சம் கிறுக்குத்தனமும் கொண்டோர் என்று சிலர் பிழையாக நினைத்துக்கொள்கிறார்கள். நமக்கு ரொம்பவே பிடித்த ‘ரெயின் மேன்’ படத்தில் வரும் ஹாஃப்மன் போன்ற கதாபாத்திரங்கள் மாதிரி இருப்பார்கள்போல என்றும் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆட்டிசம் என்பது ஒரு தொகுப்புக்கற்றை (Spectrum). வெளி உலகிற்கு தென்படுபவை என்னவோ இக்கற்றையின் சில இழைகளே. தாங்கள் சொல்ல நினைப்பதையோ, தெரிவிக்க முயல்வதையோ கூட செய்ய முடியாதவர்களும் ஆட்டிசமுடன் இருக் கிறார்கள்.