உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டியது

வாஷிங்டன், நவ. 11 உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2000வது ஆண்டில் உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்த நிலையில், 23 ஆண்டுகளில் 200 கோடி அதிகரித்துள்ளது. மக்களின் சராசரி வயது தற்போது 32 ஆக உள்ளதாகவும் இவை 2060ம் ஆண்டில் 39 வயதாகவும் உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 1960வது ஆண்டில் இருந்து 2000ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அவை குறைந்துள்ளது.
பெண்கள் கருவூரும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவதே இதற்கு காரணம் என கணக்கெடுப்பு மையம் கூறியுள்ளது.
உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ முதல் இடம் பிடித்துள்ளது. டோக்கியோவின் மக்கள் தொகை 3,71,94,105 ஆக உள்ளது.
பட்டியலில் டெல்லி 3,29,41,309 மக்கள் தொகையுடன் 2ம் இடத்திலும் சீனாவின் ஷாங்காய் 2,92,10,808 3ம் இடத்திலும் உள்ளது. 2,12,96,517 பேருடன் மும்பை 9வது இடத்திலும் 1,53,32,793 பேருடன் கொல்கத்தா 17வது இடத்திலும் 1,36,07,800 பெங்களூரு 23வது இடத்திலும் 1,17,76,147 சென்னை 26வது இடத்திலும் உள்ளன.