
புதுடெல்லி: அக்டோபர் 15-
சமீப காலமாக தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் தான் இப்படியென்றால், வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் வெள்ளியை வாங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தான், பிரபல நிதி ஆலோசகரும், ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
78 வயதான கியோசாகி, தான் எழுதிய ‘ரிச் டாட்’ஸ் பிராஃபெசி’ என்ற புத்தகத்தில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதிச் சரிவு இறுதியாக இந்த ஆண்டே நிகழப் போகிறது என்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தச் சரிவு ஏற்படும்போது, ஓய்வூதிய மற்றும் சேமிப்புக் கணக்குகள் அனைத்தும் அழிக்கப்படலாம். இது பேபி பூமர்ஸ் தலைமுறையினரைத் தங்கள் ஓய்வுக்காலத் திட்டங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வைக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், காகித அடிப்படையிலான முதலீடுகளை கைவிட்டுவிட்டு, உண்மையான மற்றும் தொட்டு உணரக்கூடிய சொத்துக்களை நோக்கிச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அவரது பார்வையில், வெள்ளி மற்றும் எத்தேரியம் ஆகிய இரண்டும் இன்னும் குறைந்த மதிப்பில் இருப்பதோடு, உண்மையான தொழில்துறைப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளன. மேலும், நிதிச் சரிவு ஏற்பட்டால் பேபி பூமர்ஸ் தலைமுறையினர் “வீடற்றவர்களாக மாறலாம் அல்லது தங்கள் குழந்தைகளுடன் வாழ நேரிடலாம்” என்றும் இது ஒரு சோகமான எதார்த்தம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஃபியட் கரன்சிகளை (அரசு வெளியிடும் தனது வழக்கமான வாசகமான சேமிப்பாளர்கள் தோற்கிறார்கள் என்பதை மீண்டும் அவர் வலியுறுத்தினார். அவரது கருத்துப்படி, பணவீக்கம் மக்களின் சேமிப்பை குப்பை ஆக்கிவிடுகிறது என்று கூறுகிறார்.

















