உலக வெப்பமயம் – இந்தியா பாகிஸ்தான் சீனா பெருமளவில் பாதிக்கும்

புது டெல்லி : அக்டோபர் .10 – உலகம் முழுக்க தற்போது உருவாகிவரும் மாறுபட்ட சீதோஷ்ணம் மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக இந்த நூற்றாண்டு இறுதிக்குள்ளாக இந்தியா , இந்து சமவெளி மற்றும் உலகின் மிக முக்கிய பகுதிகளில் மாரடைப்பு , உஷ்ண தாக்குதல் போன்ற நோய்கள் மிக அளவில் அதிகரிக்க உள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன . உலகின் எதிர்காலம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் பார்ட்யூ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள கணிப்புகளின்படி பூமியின் உஷ்ணநிலை 1.5 டிகிரி செல்ஸியஸுக்கு அதிகமாக மாறும்போது உலக மனித உயிரினங்களின் ஆரோகயத்திற்கு மிகவும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனித உடல்கள் ஒரு அளவிற்ற்கு மட்டுமே பூமியின் உஷ்ண நிலையை தாக்கு பிடிக்க முடியும் . ஆனால் இதுவே உஷண நிலை அதிகரிக்கும் நிலையில் மனிதர்கள் உஷ்ண தாக்குதல் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிப்புக்குள்ளாவர் . பூமியின் உஷ்ண நிலை 2 டிகிரி செல்ஸியஸ் தாண்டினால் இந்து சமவெளி பகுதியில் பாகிஸ்தானின் 2.2 கோடி மக்கள், கிழக்கு சீனா பகுதியின் ஒரு கோடி பேர் மற்றும் ஆப்ரிக்காவின் 800 லட்சம் பேர் இந்த கொடுமைகளை சந்திக்கக்கூடும் என ஆய்வு தெரிவிக்கியின்றது . இத்தகைய வருடாந்தர உஷ்ண அலைகளை இந்தியாவின் டெல்லி , கொல்கத்தா , சீனாவின் ஷாங்காய் , நஞ்சிங்க் , மற்றும் யூஹான் ஆகிய நகரங்கள் பாதிப்புக்குள்ளாகும் . ஏனெனில் இந்த பகுதியில் பெரும்பாலும் குறைந்த வருமணமுள்ள மக்களே வசிப்பதால் அவர்களுக்கு உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் குளிர்சாதன வசதிகளோ அல்லது தங்கள் உடலை குளுமை படுத்திக்கொள்ள வேறு வசதிகளோ இருப்பதில்லை. ஆனால் வரர்ச்சியடைந்த நாடுகளில் இந்த பாதிப்புகள் குறைவாக இருப்பினும் வளர்ந்து வரும் நாடுகளில் முதியோர் மற்றும் நோயாளிகள் பெருமளவில் இறந்துபோவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்திருப்பதுடன் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மற்றும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளிலேயே வரும் காலங்களில் இந்த உஷ்ண அலைகள் பாதிப்புகளை உருவாகும். என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது