உலர் இருமல் பிரச்சனைக்கு தீர்வுகள்


சோம்பு : இது உலர் இருமல் பிரச்னையை விரைவில் போக்கும். வயிற்று வலி, வாயு போன்ற பிரச்சனைகளை இது தீர்க்கும். இத்துடன் சோம்பை சளி மற்றும் இருமல் சந்தர்ப்பங்களிலும் பயன் படுத்தலாம். சோம்பு தொண்டைக்குழாய்களை சீராக வைத்திருக்க உதவும். இதற்கு சோம்பு கஷாயத்தை செய்து குடிக்கலாம். இந்த கஷாயத்தில் சோம்பின் சில இலைகள் பூக்கள் மற்றும் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
மிளகு: உலர் இருமலுக்கு தேனுடன் மிளகை சேர்த்து பருகலாம். மிளகில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி -பயோடிக் குணங்கள் உள்ளது. இது உலர் இருமல் மற்றும் சளியை போக்கவல்லது.
இஞ்சி: இஞ்சியில் ஆன்டி -வைரல் குணங்கள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். இஞ்சியை மென்று தின்றாலும் நல்லதே. தேவையெனில் சற்று சூடான நீர் மற்றும் தேனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடிப்பதால் உலர் இருமல் மொத்தமும் இல்லாமல் போகும்.
மஞ்சள்: மஞ்சள் , சளி மற்றும் இருமல்களுக்கு ஒரு உகந்த வீட்டு மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சளில் உள்ள காம்பௌண்ட் கர்க்யுமின் என்ற பாக்டீரியாக்களுக்கு எதிரான சக்தி பல தொற்றுகளிலிருந்து நம்மை காக்க வல்லது. இரவு உறங்கும் முன் மஞ்சள் தூளை ஒரு லோட்டா சூடு பாலில் கலந்து குடிக்கவும். இதனால் உலர் இருமல் கட்டுக்குள் வரும்.
பெருங்காயம்: பெருங்காயத்தில் அன்டி – வைரல் மற்றும் அனைத்து ஜீவ சக்திகளையும் கொண்டுள்ளது. தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை உட்கொள்வது ஆஸ்துமா பிரான்கெடிஸ் , உலர் இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும். தவிர இருதய எரிச்சலை போக்கும் மற்றும் சளியை வெளியேற்றும் ஆற்றல் பெருங்காயத்திற்கு உண்டு.