உலர் பழங்கள் மற்றும் கஜுர் லட்டு


தேவையான பொருட்கள்
முந்திரி – கால் கப்
பச்சை கஜூர் – அரை கிலோ
பாதாம் – கால் கப்
பிஸ்தா – கால் கப்
நெய் – இரண்டு ஸ்பூன்
கோந்து – ஒரு ஸ்பூன்
கச கச – ஒரு ஸ்பூன்
ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி – அரை ஸ்பூன்
செய்யும் முறை: கஜுரை மிக்ஸி ஜாரில் போட்டு திரி திரியாக அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளவும் . பின்னர் முந்திரி , கச கச பாதாம் , பிஸ்தாவை திரி திரியாக பொடி செய்து கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நேய் ஊற்றி சூடாக்கி அதில் கோந்தை போட்டு தங்க நிறம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அதை வேறு பாத்திரததில் போட்டு கொள்ளவும் . அதே வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி உலர் பழங்களை போட்டு தங்க நிறம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும் . பின்னர் இதில் கஜூர் கலவையை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு வைக்கவும். பின்னர் இதற்கு ஏலக்காய் பொடி ஜாதிக்காய் பொடி மற்றும் பொடி செய்து கோந்து போட்டு கலக்கவும். இதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு சிறு உருண்டைகளாக செய்துவிட்டால் நீங்கள் எந்த பிரபல இனிப்பு கடைகளிலும் இது வரை பார்த்திராத சுவையான மற்றும் உடலுக்கு எந்த தீங்குகள் இன்றி வெறும் நன்மைகளையே தரவல்ல ஒரு உன்னதமான லட்டு உங்கள் கைகளிலே.