உலோக வாயு வெடித்து காயமடைந்த இருவர் உயிரிழப்பு

பெங்களூரு, மே 23: நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டையில் உள்ள எஸ்கே ஸ்டீல் நிறுவனத்தில் உலோக வாயு வெடித்ததில் காயமடைந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பீகாரைச் சேர்ந்த அசோக் குமார் (49), ஒடிசாவைச் சேர்ந்த முகேஷ் குமார் (33) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த சுஷில் குமார் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த மே 17 ஆம் தேதி தாபஸ்பேட்டை எஸ்கே ஸ்டீல் நிறுவனத்தில் உலோக வாயு வெடித்து 3 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிறுவனத்தின் மேற்பார்வையாளர் பப்புயாதவ், நிர்வாகத்தின் மீது தபாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.