உளவு’ பார்ப்பதை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு, ஜூலை 22- உளவு பார்ப்பதை தீவிரமாக எதிர்த்துள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் இன்று இது விஷயமாக போராட்டம் நடத்தி இது குறித்து விசாரணை நடத்த ஆளுநரை வற்புறுத்தியுள்ளனர் . சட்ட மன்ற வளாகத்தில் இன்று கூடிய அனைத்து எம் எல் ஏக்கள் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்தனர். ஆனால் வழியிலேயே எம் எல் ஏக்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் மற்றும் எம் எல் ஏ ரமேஷ் குமார் உட்பட மேலும் சிலர் கொண்ட குழுவினர் ஆளுநர் மாளிகைக்கு சென்று தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர்கள் , முக்கிய அரசியல் வாதிகள் பத்திரிகையாளர்கள், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் உட்பட பலரின் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டு வருவதால் தனி நபர் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பாரதீய ஜனதா அரசின் தோல்விகளை மறைக்கும் உத்தியாகும் என்பது தெளிவாக தெரிகிறது . என்று குற்றம் சாட்டிய சித்தராமையா இந்த அரசு முடிந்தவரை சீக்கிரமாக தொலைய வேண்டும். என்றார் இது குறித்து டி கே சிவகுமார் கூறுகையில் சட்டத்துக்கு புறம்பாக இந்த ஆட்சி நடக்கிறது இந்த வகையில் இன்று மக்கள் உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன என்றார்.