உள்கட்டமைப்பு பணிகளுக்காக வெட்டப்பட்ட 10 ஆயிரம் மரங்கள்

பெங்களூர், செப்.1-
பெருநகர் பெங்களூரில் 2021 ஆகஸ்ட் முதல், 2023 ஆகஸ்ட் இடையே வரை பல்வேறு உள்கட்டமைப்புகள், மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக, பத்தாயிரம் மரங்கள் வெட்டப்பட்டன.
பெருநகர் பெங்களூர் மாநகராட்சி அளித்துள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி, 12 ஆயிரத்து 859 மரங்களை அகற்ற பல நிறுவனங்கள், அமைப்புகள், அனுமதி கேட்டிருந்தது.
அனுமதி பெற்ற பின் 9,641 மரங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் அகற்றக் கோரி டி.இ.சி., இடம் 75 சதவீதம் மரங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 13 .5% மரங்களை இடமாற்றம் செய்ய அனுமதி அளித்தது. அதன்படி 1,736 மரங்கள் இடம் மாற்றம் செய்தன. 1,482 மரங்கள் இதன் மூலம் தக்க வைத்து கொள்ள முடிந்தது .
பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பல பசுமையான மரங்களை தியாகம் செய்ய வேண்டியதாயிற்று. மெட்ரோ ரயில், பி. எம். ஆர். சி. எல். 5,231 மரங்களை வெட்ட அனுமதி கேட்டிருந்தது. இதில் 4,031 மரங்கள் வெட்ட அனுமதி அளிக்கப்பட்டது .
5,231 மரங்களில் 138 மரங்கள் தக்க வைத்துக் கொள்ள நேரிட்டது.

கர்நாடக ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் என்ற கே. ரைடு 3,645 மரங்களை அகற்ற அனுமதி கோரியது. இதில் 2,838 மரங்களை மட்டுமே வெட்ட டிஇசி அனுமதி வழங்கப்பட்டது.

225 மரங்களை இடம் மாற்றம் செய்யவும் ,592 மரங்களை தக்க வைத்துக் கொள்ளவும் அப்போது அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 2,782 மரங்கள் வெட்ட பெங்களூர் மாநகராட்சி தென்மேற்கு ரயில்வே எச் ஏ எல் சாலை மேம்பாட்டு கழகம் அரசு முதல் நிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்களுக்கு மரங்கள் அவசியமாகும். எனவே மரங்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.