உள்துறை, பாதுகாப்பு, நிதி, வெளிவிவகாரம் தம் வசம் வைக்க பிஜேபி உறுதி

புதுடெல்லி, ஜூன் 6-
மத்தியில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது இந்த கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு உள்ளார் இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு முக்கிய இலாகாக்கள் வழங்க வேண்டும் என்று பிஜேபி மேலிடத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இலாகாக்களை பகிர்வது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் விவாதம் நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு, நிதி, உள்துறை மற்றும் வெளியுறவு போன்ற முக்கியமான துறைகளை பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்து, யாருக்கும் இந்த இலாகாக்களை வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி-டிடிபி மற்றும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் ஐக்கிய ஜேடியு- ஆகியவை முக்கிய துறைகளைக் கேட்டு வருகிறது
பிஜேபி தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சில முக்கிய இடங்களை எளிதில் விட்டுக் கொடுக்காது என்றும், பாதுகாப்பு, நிதி, உள்துறை மற்றும் வெளியுறவு ஆகிய முக்கிய இலாகாக்களில் தனது பங்கை உறுதி செய்துள்ளதாகவும் தெரிகிறது
தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 இடங்களையும் பெற்றுள்ளன,
தெலுங்கு தேசம் கட்சி நான்கு அமைச்சரவை இடங்களைக் கோரியுள்ளது. ஜே.டி.யு மூன்று அமைச்சர் பதவிகளை கோரியுள்ளது. கூடுதலாக, கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களும், சிராக் பாஸ்வானின் எல்ஜேபி 5 இடங்களும் தலா இரண்டு அமைச்சர் பதவிகளை கோரியுள்ளன.
சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு நோட்டமிட்டு வருகிறார், ஆனால் பாஜக இந்த கோரிக்கையை ஏற்க தயாராக இல்லைஎ ன்று தெரிகிறது