உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல்: அ.தி.மு.க., அழைப்பு

சென்னை, நவ. 25- ‛‛தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட (நாளை நவ.,26ம் தேதி முதல் 28 ம் தேதி வரை) அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்,” என்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் மாநகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை நவ.,26ம் தேதி முதல் 28 ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பட்ட படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கோரும் கட்சியினர் தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம்: ரூ.5,000.நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம்: 2,500.பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனு கட்டணம் 1,500.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட ஏற்கனவே விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அதற்கான கட்டண அசல் ரசீது வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் சமர்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெறலாம்.
சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது தொடர்பான விபரங்களை கட்சியினர் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும். அதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.