உ.பி.யில் சாலை விபத்து: 4 பேர் பலி

லக்னோ: செப்.15-
உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேரந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மே லும் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.