உ.பி.யில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா

லக்னோ : ஜனவரி 12 – உத்தரப்பிரதேசத்திற்க்கான தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே மாநிலத்தில் கட்சி மாறும் நடவடிக்கைகள் சுறுசுறுப்பாகியிருப்பதுடன் இம்மாநிலத்தின் பாரதீய ஜனதாவிற்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் தாராசிங்க் தன் அமைச்சர் பதவிக்கு ராஜினாமா கொடுத்து சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துகொண்டுள்ளார். இதற்க்கு முன்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராயிருந்த பிரபாவி நாயகஸ்வாமி பிரசாத் மௌர்யா கடந்த செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதாவிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் தன்னை சேர்த்து கொண்டார். அவருடன் எம் எல் ஏக்களான ரோஷன் லால் வர்மா பகவதி சாகர் மற்றும் பிரிஜேஷ் பரபாபதி ஆகியோரும் பாரதீய ஜனதாவை விட்டு விலகி சமாஜ்வாதி கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். பாரதீய ஜனதாவுக்கு மற்றொரு சங்கடம் உண்டாகியுள்ள நிலையில் யோகி ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜ்புத் சமுதாயத்தின் பிரபல பிரமுகராயிருந்த தாரா சிங்க் சவுஹான் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வனத்துறையை விட்டு விலகி உள்ளார். 403 உறுப்பினர்களின் பலத்தை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை மொத்தம் 7 தவணைகளில் தேர்தல்கள் நடக்கஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.