உ.பி.: 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

பாராபங்கி, செப்டம்பர். 4 உத்தர பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பலர் சிக்கி கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், உடனடியாக போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் பற்றி பாராபங்கி எஸ்.பி. தினேஷ் குமார் சிங் கூறும்போது, அதிகாலை 3 மணியளவில் பாராபங்கியில் கட்டிடம் இடிந்து விழுந்தது என எங்களுக்கு தகவல் கிடைத்தது.நாங்கள் சம்பவ பகுதியில் இருந்து 12 பேரை மீட்டுள்ளோம். இடிபாடுகளுக்குள் இன்னும் 4 பேர் சிக்கியிருக்க கூடும் என எங்களுக்கு தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேச மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைவில் வரவுள்ளனர். மீட்கப்பட்ட 12 பேரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் 2 பேர் உயிரிழந்து விட்டனர் என கூறியுள்ளார்.

https://www.dailythanthi.com/News/India/up-2-killed-in-3-storied-building-collapse-1045149