ஊதா மெட்ரோ வழித்தடத்தில் முதல் நாளேகூட்டம் அலைமோதியது

பெங்களூர், அக் 10-
ஊதா வண்ண மெட்ரோ ரயில் கெங்கேரி முதல் செலகட்டா வரை மற்றும் பையப்பனஹள்ளி முதல் கே ஆர் புரம் வரை வழித்தடத்தில் போக்குவரத்து துவங்கியது.
நேற்று முதல் நாளில் கூடுதலாக பயணிகள் பயணம் செய்தனர். இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதன்
மொத்த நீளம் 43. .49 கிலோ மீட்டர். செலகட்டா – ஒயிட் பீல்டு வரை திங்கட்கிழமை பயணம் செய்தோர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
காலை 5 மணி முதல் ஒயிட் பீல்ட் – செல்ல கட்டா புறப்பட்டது. ஒவ்வொரு நாளும் மெட்ரோவில் 6.30 லட்சம் பேர் மெட்ரோ ரயில் பயணம் செய்தார்கள். ஆனால் நேற்று மட்டும் 6. 75 லட்சம் பேர் பயணித்தார்கள். இந்த தூரத்தை கடக்க ஒரு மணி 20 நிமிடங்கள் பிடித்தது.இதனால் பெங்களூர் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜோதி என்பவர் கூறுகையில் , இந்த வழித்தடத்தில் எப்போது மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என பலர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இது குறித்து பல முறை வாதங்களும் ஏற்பட்டது. கெங்கேரி இடையே இப்போது மெட்ரோ ரயில் துவங்கியது. இதன் டிக்கெட் கட்டணம் 57 ரூபாய். ஒயிட் ஃபீல்டு – செலகட்டா வரை 39 ரயில் நிலையங்கள் உள்ளன. காலை மணிக்கு மெட்ரோ சேவை துவங்கி இரவு 10.45 மணி வரை இயங்கும். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு மெட்ரோ ரயில் சேவை இருக்கும்.