ஊதுபத்தி தொழிற்சாலையில்தீ விபத்து

பெங்களூர் : அக்டோபர் . 14 – நகரில் மற்றொரு தீ விபத்து நடந்திருப்பதுடன் தற்போதைய தீவிபதது ஒரு ஊதுவத்தி தொழிற்சாலையில் நடந்திருப்பதுடன் இந்த தீ விபத்தால் வீதியில் நிறுத்தட்டிருந்த எட்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியுள்ள நிலையில் மேலும் பல பொருட்கள் எரிந்து சாம்பலாகி பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சோளர்பால்யாவில் உள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்டுவந்த ஊதுவத்தி தொழிற்சாலையில் இன்று காலை எட்டு மணியளவில் தீ தென்பட்டுள்ளது . ஊதுவத்திகள் மற்றும் ஊதுவத்தி தயாரிக்க பயன்படுத்தப்படும் கச்சா பொருட்கள் வீடு முழுக்க இருந்த நிலையில் தீ மிக வேகமாக வீடு முழுக்க பரவியுள்ளது. இந்த தீ விபத்து நடந்த உடனேயே வீட்டில் இருந்த அனைவரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து விட்டதால் எவ்வித உயிர் சேதமும் இல்லை. சம்பவ இடத்திற்கு மூன்றிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மிகவும் போராடி தீயை முழுதுமாகஅனைத்துள்ளார் . தவிர அக்கம்பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இந்த தீ விபத்திற்கு காரணம் இன்னும் தெரிய வரவில்லை . சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசீலித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.