ஊரைவிட்டு காலி செய்து விடுவதாக (அதிமுக) ஊராட்சி மன்றத்தலைவர் மிரட்டல்: பாதிக்கபட்ட குடும்பம் எஸ்பியிடம் புகார்

ஊரைவிட்டு காலி செய்து விடுவதாக (அதிமுக) ஊராட்சி மன்றத்தலைவர் மிரட்டல்: பாதிக்கபட்ட குடும்பம் எஸ்பியிடம் புகார்.
தர்மபுரி,ஜூன்.09-
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேவுள்ள, பொம்மசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக நி்ர்வாகியுமாக இருந்து வரும் முனியப்பன், என்பவர் மீதே, அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது: சம்மந்தபட்ட முனியப்பனும் அவரது சகோதரர்களும், சூதாட்டம், மது விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது குறித்து, அவ்வப்போது சம்மந்தபட்ட இண்டூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து வந்ததாகவும், இதனையறிந்த அதிமுக நிர்வாகியும், ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரும் முனியப்பன் அடியாட்களோடு தனது வீட்டிற்கு வந்து தன்னையும் எனது குடும்பத்தாரையும் சராமாரியாக தாக்கியும், தன்னை எதிர்த்தால் ஊருக்குள்ளே குடியிருக்க முடியாது, ஊரை விட்டே காலி செய்து விடுவேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து, தனது சரக்கு வாகனம் ஒன்றினை( மினிடோர்) எடுத்து சென்று விட்டனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக சொந்த வீட்டிற்கே திரும்ப முடியாமல் தனது உறவினர் வீட்டில் தஞ்சமடைந்து தவித்து வருவதாகவும், சம்மந்தபட்ட முனியப்பன் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து தங்களது குடும்பத்தாரை காப்பற்ற வேண்டும் என இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட முருகன்.
ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக நிர்வாகியாக இருந்து வரும் நபர் மீது காவல்துறையில் புகாரளிக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.