ஊழல் விவகாரம் : உச்சநீதிமன்றத்த்தில் எடியூரப்பா மனு

பெங்களூர் : செப்டம்பர். 18 – ஊழல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை எதிர்த்து முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி டி வொய் சந்திரசூடா மற்றும் ஹிமா கொஹ்லி ஆகியோர் கொண்ட அமர்வு இது குறித்து நாளை விசாரணை நடத்த உள்ளது. எடியூரப்பா முதல்வராக இருந்த சமயத்தில் பெங்களூரு அபிவிருத்தி குழுமம் தொடர்பான குத்தகைகள் அளித்ததில் ஊழல் நடந்துள்ளதாக சமூக சேவகர் டி ஜெ ஆப்ரஹாம் என்பவர் நீதிமன்றத்தில் தனியார் புகார் பதிவு செய்திருந்தார். ஆனால் ஆளுநர் இதற்க்கு முழு அனுமதி தராத நிலையில் புகாரை தள்ளுபடி செய்து மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டி ஜெ ஆப்ரஹாம் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆப்ரஹாமின் புகாரை மறுபரிசீலிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. பின்னர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு லோகாயுக்தாவிற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருந்தது. இந்த நிலையில் லோகாயுக்தா போலீசார் முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா , அவருடைய மகன் பி வொய். விஜயேந்திரா மற்றும் வேறு சிலருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது எடியூரப்பா உச்சநீதிமன்றத்தில் தன் சட்ட போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.