ஊழியர் கைது

புதுடெல்லி, ஜனவரி. 19 – தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தவர் சுமித். கம்ப்யூட்டர் பிரிவில் ‘டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக’ வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வெளிநாடுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு மத்திய நிதித்துறை அமைச்சக ரகசிய தகவல்களை உளவு பார்த்து கசிய விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்தை கைது செய்தனர்.

அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, நிதித்துறை அமைச்சக ரகசிய தகவல்களை அவர் உளவு பார்த்து தெரிவித்தது அம்பலமானது.