எச்ஏஎல் தொழிற்சாலையைபார்வையிட்ட பிரதமர் மோடி

பெங்களுர் : நவம்பர் , 25 –
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பெங்களூர் வந்தார். எச்ஏஎல் தொழிற்சாலைக்கு சென்ற பிரதமர் அங்கு தொழிற்சாலையில் தொழில்நுட்பம் உற்பத்தி திறன் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார் அவரிடம் உயர் அதிகாரிகள் தொழிற்சாலையில் உற்பத்தி திறன் குறித்து விளக்கிக் கூறினர்
இந்திய விமான படை ஹெச் ஏ எல் நிறுவனத்திலிருந்து பல போர் விமானங்கள் , லகு ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வாங்கி தன்னுடைய சுகோய் -30 படையை பலப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமரின் விஜயம் மிகவும் முக்கியம் பெறுகிறது. இன்று நகருக்கு வந்த பிரதமர் நரேந்திரமோதி ஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு சென்று அங்கு உருவாகும் விமான உருவாக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தும் பார்வையிட்டார். இது பிரதமரின் அலுவல் நிமித்த விஜயமாகும் . தவிர இதில் முக்கியமாக பிரதமர் ஹெச் ஏ எல் நிறுவனத்தின் லகு விமான உற்பத்தி பகுதியை நேரில் பார்வையிட்டார். இந்திய ராணுவம் அறிவித்துள்ள விமான படையை மேம்படுத்த ஹெச் எ எல் வாயிலாக பெற உள்ள வர்த்தகம் பல லட்ச டாலர்களுக்கு உகந்தவை . இதே வேளையில் ஹெச் எ எல் நிறுவனம் பிரான்சின் சாபராண் மையத்துடன் இனைந்து ஹெலிகாப்டர் என்ஜின்களை உருவாக்வும் திட்டமிட்டிருப்பதுடன் யு எஸ் நாட்டின் ஜி ஈ ஏரோ ஸ்பேஸ் என்ற நிருவத்தின் கூட்டமைப்பில் போர் விமான என்ஜின்களை தயாரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. தவிர நாட்டில் தற்போது தேவைப்படும் போர் விமானங்கள் உற்பத்தியை பெருக்கும் வகையில் நாசிக்கில் தன் புதிய உற்பத்திகளை பெறுக்க உள்ளது. இந்த வகையில் கடந்த 2021ல் 48 கோடிகள் மதிப்பில் இந்திய ராணுவத்தால் வழங்கப்பட்ட 83 போர் விமானங்களை தயாரித்து அனுப்பும் நிலையில் ஹெச் ஏ எல் தயாராகியுள்ளது . தவிர மேலும் 67 ஆயிரம் கோடி மதிப்பில் 97 உயர்ரக போர் விமானங்களை வாங்க விமான படை முடிவு செய்துள்ளதாக விமான படை தளபதி சவுதிரி கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார். பெங்களூரின் ஹெச் ஏ எல் நிறுவனம் ஆண்டிற்கு 16 போர் விமானங்களை தயாரிக்கும் திறம் கொண்டிருக்கும் நிலையில் நாசிக் பிரிவின் ஹெச் ஏ எல் இனைந்து 24 போர் விம்மனங்களை தயாரிக்கும் நிலையில் உள்ளது.