எச்.டி.தேவேகவுடாவிற்காக‌ தொகுதியை விட்டுத்தர தயார்: பிரஜ்வல் ரேவண்ணா

ஹாசன், அக். 27: முன்னாள் பிரதமர் தேவேகவுடா போட்டியிட்டால் ஹாசன் மக்களவைத் தொகுதியை விட்டுத்தர தயாராக உள்ளதாக அவரது பேரனும், அந்த தொகுதியின் தற்போதைய மஜத எம்.பியுமான‌ பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக மாநிலம் ஹாசன் மக்களவை தொகுதியில், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா போட்டியிட்டால், அந்த தொகுதியை விட்டுக் கொடுப்பேன் என பிரஜ்வல் ரேவண்ணா கூறினார்.
மேலும், அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை. தேவேகவுடா, ஹாசனில் போட்டியிட்டால், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்பேன். தும்கூரு லோக்சபா தொகுதியில் தேவேகவுடா போட்டியிட்டு தோல்வியடைந்தபோது, ஹாசன் மக்களவை தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, அந்தத் தொகுதியை தேவேகவுடாவிற்கு விட்டுக் கொடுப்பதாகச் சொன்னேன்.
அடுத்த தேர்தலில் ஹாசன் மக்களவைத் தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் கட்சியின் உயர்மட்டக்குழு முடிவு செய்யும். தேர்தலுக்கு தயாராவதை விட, மக்களின் துயரங்களை அறிவது எனக்கு முக்கியம் என அவர் பதிலளித்தார்.