எச்.டி.ரேவண்ணா இன்று மாலை விடுதலை

பெங்களூரு,மே.14
பெண் கடத்தல் வழக்கு தொடர்பாக, எச்.டி.ரேவண்ணாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளதை தொடர்ந்து இன்று மாலை சிறையில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இன்று நீதிமன்றத்தில் நீதிபதியிடம் இருந்து விடுதலை உத்தரவு வந்த நிலையில், இன்று மாலை ஹெச்.டி.ரேவண்ணா விடுதலை செய்யப்படுகிறார்.
இது தொடர்பாக சிறப்பு மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜான பட் பிறப்பித்த உத்தரவில், எச்.டி.ரேவண்ணா 5 லட்சம் ரூபாய் பத்திரம் வழங்க வேண்டும், ஆதாரங்களை அழிக்காமல், எஸ்ஐடி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.