எடப்பாடி மீது பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை: செப்.1-
அதி​முக தேமு​திக கூட்​டணி ஒப்​பந்​தத்​தில் மாநிலங்​களவை சீட் தரு​வ​தாகக் கூறி பழனி​சாமி நம் முதுகில் குத்​தி​விட்​டார் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நிர்​வாகி​கள் மத்​தி​யில் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.சென்​னை​யில் தேமு​திக தென்​சென்னை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்றது. இதில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா பேசி​ய​தாவது:செப்​டம்​பர் மாத இறு​திக்​குள் பூத் கமிட்டி பணி​களை நிறைவு செய்ய வேண்​டும். தேர்​தலுக்கு சில மாதங்​களே உள்ள நிலை​யில் கடின​மாக உழைக்க வேண்​டும். மேலும், அதி​முக-வுடன் 2024 நாடாளு​மன்ற தேர்​தலில் கூட்​டணி அமைத்​த​போது 5 மக்​களவை தொகு​தி​களும், 1 மாநிலங்​கவை​யும் ஒதுக்​கு​வ​தாக தெரி​வித்​தனர். ஆனால் அந்த சீட் நமக்கு கொடுக்​க​வில்​லை. சீட் தரு​வ​தாக கூறி பழனி​சாமி நம்மை முதுகில் குத்​தி​விட்​டார். முதல்​வ​ராக இருந்​தவர், கட்சி தலை​வ​ராக இருக்​கிறார், கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்​று​வார் எனநம்​பினோம். அதனால் நம்​பிக்​கை​யின் பேரில் கையெழுத்​திட்​டோம். அதனால்​தான் நாம் ஏமாந்​து​விட்​டோம். பழனி​சாமி​யின் பிரச்​சார கூட்​டத்​துக்கு காசு கொடுத்து தான் அழைத்து வரு​கிறார்​கள். இவ்​வாறு அவர் பேசினர்.