எடியூரப்பாவின் கருத்து கட்சியை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை : முதல்வர்

பெங்களூர் ஜூலை. 23 – முன்னாள் முதல்வர் எடயூரப்பா என்றால் ஒரு பெரிய சக்தி. நாற்பது ஆண்டுகளும் மேலாக அவர் அரசியலில் ஈடுபட்டுவந்துளார். அவருடைய அறிக்கைகளால் கட்சி சங்கடத்தில் சிக்க வில்லை என மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று தெரிவித்தார். எடியூரப்பா சமீபத்தில் ஷிகாரிபுராவில் அறிக்கை அளித்ததன் பின்னணியில் இன்று முதல்வர் பி எஸ் எடியூரப்பாவை சந்தித்து பேச்சு வார்த்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில் விஜயேந்திரா ஷிகாரிபுராவில் போட்டியிட இருப்பது குறித்து நேற்று எடியூரப்பா தெரிவித்திருப்பது ஒரு ஆலோசனை மட்டுமே. தொகுதி மக்கள் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளனர். அதனால் எடியூரப்பா நேற்று அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தலில் விஜயேந்திரா போட்டி மட்டுமின்றி மொத்த மாநில தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் குறித்து மோதி மற்றும் அமித் ஷா முடிவு செய்வார்கள். முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா பதவி விட்டு விலகிய போது எவ்வித சங்கடமும் இக்கட்டும் ஏற்படவில்லை. இப்போது புது குழப்பங்களை உருவாக்குகிறீர்களா? அனைத்து விஷயங்கள் குறித்தும் கட்சி மேலிடம் முடிவு செய்யும் . இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.