எடியூரப்பாவை பழிவாங்கவில்லை

பெங்களூரு, ஜூன்14: எடியூரப்பா கைது விவகாரத்தில் பழிவாங்கும் அரசியல் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் பங்கு உள்ளது என்ற பாஜகவின் குற்றச்சாட்டை மாநில உள்துறை அமைச்சர் டாக்டர். ஜி.பரமேஸ்வர் மறுத்துள்ளார்.போக்சோ வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதன்படி அவர் கைது செய்யப்படுவ‌தற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பழிவாங்கும் அரசியலும் இல்லை. இதில் காங்கிரஸ் மேலிடத்தின் பங்கும் இல்லை என்றும் உள்துறை அமைச்சர் டாக்டர். ஜி. பரமேஸ்வர் தெளிவுபடுத்தினார்.பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடியூரப்பா விரைவில் விசாரணைக்கு வந்து கலந்துகொண்டால் நல்லது என்றும், இல்லையெனில் அவரை போலீசார் அழைத்து வருவார்கள் என்றும் கூறினார்.
எடியூரப்பா கைது தொடர்பாக பாஜக தலைவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் பங்கு இல்லை என்றும், பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும் அவர் கூறினார்.
போக்சோ வழக்கு தொடர்பான கடந்த 3 மாத ஆதாரங்கள் அனைத்தும் எப்எஸ்எல்-க்கு அனுப்பப்பட்டது. எப்எஸ்எல்சின் அறிக்கைகளும் வந்துள்ளன. அதன்படி எடியூரப்பாவை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றமும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா முன்னாள் முதலமைச்சராக இருப்பதாலும், முக்கிய நபர் என்பதாலும் இந்த வழக்கை மிகவும் கவனமாக கையாள வேண்டும். எல்லாம் சட்டப்படிதான் நடந்தது வருகிறது என்றார்.எடியூரப்பா டெல்லியில் இருப்பதாகவும், இம்மாதம் 17-ம் தேதி பெங்களூரு வருவதாகவும் கூறினார். டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சீக்கிரம் வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

டெல்லிக்கு சிஐடி குழு: போக்சோ வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், எடியூரப்பா டெல்லியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிஐடி போலீசார் டெல்லி சென்று எடியூரப்பாவை தேடி வந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி போலீசார் வாரண்ட் பிறப்பித்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் பிடிவாரண்ட் பெற்றிருந்தனர். தன்னை கைது செய்ய சிஐடி தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ள எடியூரப்பா, உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. .எடியூரப்பாவுக்கு இன்று முன்ஜாமீன் வழங்கப்படாவிட்டால், சிஐடி போலீசார் அவரை காவலில் எடுப்பார்கள். டெல்லியில் உள்ள எஸ்பி கிரேடு சிஐடி போலீஸ் குழு எடியூரப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

நான்கு குற்றவாளிகள்: போக்சோ வழக்கில், எடியூரப்பா முதல் குற்றவாளி, டி தாசரஹள்ளியைச் சேர்ந்த ஒய்.எம்.அருணா ஏ2, கெங்கேரி ஹோப்ளியைச் சேர்ந்த சோம்புராவைச் சேர்ந்த எம். ருத்ரேஷ், ஏ3, கெரெகுடஹள்ளி ஜி. மாரிசாமி ஏ4 என குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.