எடியூரப்பா கடும் விமர்சனம்

ஷிவமொக்கா : ஜூலை. 22 – நான் இருக்கும் வரையில் சித்தராமையா மற்றும் டி கே சிவகுமாரை முதல்வராக விடமாட்டேன் என முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா இன்று கடுமையாக தெரிவித்துள்ளார். அம்பிளிகோலா அணைக்கட்டில் இன்று பூஜை செலுத்திய பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு கொண்டு வந்து கட்சியின் தலைவரையே முதல்வராக்குவேன் என தெரிவித்துள்ளார். சித்தராமையா மற்றும் டி கே சிவகுமார் அவர்களின் தந்தைமார் சத்தியமாக அவர்களில் ஒருவரும் முதல்வர் ஆக முடியாது. பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்களே அடுத்த முதல்வராக போகின்றார்கள் என்று முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. என் கை கால்கள் மிகவும் உறுதியாக உள்ளன. இன்னும் ஒரு வருடம் வரை மாநிலம் முழுக்க பயணங்கள் மேற்கொண்டு மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சியை மாநிலத்தில் கொண்டுவருவேன் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.