எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் மரணம்: போலீசார் சொல்வது என்ன?

பெங்களூர்: மே 28
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது பாலியல் தொல்லை புகாரளித்த பெண் உயிரிழந்துள்ளர். கர்நாடாகாவில் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சிறுவனாக இருந்தபோது பிளேட், கப்களை கழுவியிருக்கிறேன்.. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்! கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவநகர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எடியூரப்பா மீது புகார்: பெங்களூரில் உள்ள எடியூரப்பாவின் வீட்டுக்கு உதவி கேட்டு சென்றிருந்த போது 17 வயது மகளை வீட்டின் ஒரு அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண்ணின் தாய் எடியூரப்பா மீது புகார் அளித்திருந்தார். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி உதவி கேட்டு தாயாருடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி புகார் அளித்துள்ளார். சிறுமி புகார் மனு: தன்னை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை வெளியில் கூற வேண்டாம். உனக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் மனுவில் கூறியுள்ளார். கர்நாடகாவில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
எடியூரப்பா மறுப்பு: லோக்சபா தேர்தலுக்கு முன்பாக எடியூரப்பா மீது பதிவான இந்த போக்சோ வழக்கு பெரும் நெருக்கடியை பாஜகவிற்கும் கொடுத்தது. இந்த வழக்கில் எடியூரப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எனினும், தன் மீதான குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்தார். எடியூரப்பா மீது புகார் அளித்த அந்த பெண், இதற்கு முன்பு முக்கிய பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது புகார் அளித்திருந்ததும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் தெரியவந்தது. Advertisement
புகார் கொடுத்த பெண் உயிரிழப்பு: இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த அந்த பெண் உளிமாவு அருகே பன்னரகட்டா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென்று உயிரிழந்தார். மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
போலீசார் விசாரணை: அங்கு சிறுமியின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனலிக்காமல் இறந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர காரணமாக இருந்த பெண் உயிரிழந்து இருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் உயிரிழப்பு தொடர்பாக சதாசிவநகர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.