எடியூரப்பா மீது பாலியல் புகார்

பெங்களூரு, மார்ச் 15:
முன்னாள் முதல்வர் பி. எஸ்.எடியூரப்பா மீது பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், எடியூரப்பா மீது சதாசிவநகர் போலீசார் போக்சோ மற்றும் 354 (ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எடியூரப்பா மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சதாசிவநகர் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். எஃப்ஐஆரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், பிப்ரவரி 2ஆம் தேதி உதவி கேட்கச் சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக இதே பெண் 53 பேர் மீது புகார் அளித்ததுள்ளார். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என 53 பேர் மீது சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக வெற்றிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர் தேர்வுக்காக பிரசாரம் செய்து வரும் எடியூரப்பாவுக்கு இந்த வழக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
புகார் அளித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்த காலங்களில் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என 53 பேர் மீது புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சதாசிவநகர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததன் அடிப்படையில், போக்சோ சட்டம் பிரிவு 8 மற்றும் ஐபிசி 354(ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக உதவி கேட்கச் சென்றபோது முதலில் 9 நிமிடங்கள் பேசிய எடியூரப்பா, சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.
அந்த புகாரில் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை தொட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எடியூரப்பா அறையை விட்டு வெளியே வந்து மன்னிப்பு கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று தங்களை மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்த பெண் 2015 முதல் இதுவரை 53 வழக்குகளை பதிவு செய்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மீதும் பெண் புகார் அளித்துள்ளார். கணவன் மற்றும் மகன் மீதும், ரவுடிகள் மீதும் புகார் அளித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவரின் உறவினர் மீது எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்?
எடியூரப்பா மீது பாலியல் புகார் கொடுத்துள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் இவர் இதற்கு முன்பு இதுபோல் 53 பேர் மீது புகார் கொடுத்தவர் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

என் மீது அபாண்ட பழி எடியூரப்பா பேட்டி : பாலியல் வழக்கை அரசியல் சதி என்று கூறமாட்டேன் என்று முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: என் மீது பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அரசியல் சதி என்று கூறமாட்டேன். எல்லாவற்றையும் எதிர்கொள்வேன். பிரச்னை என்று தாய் மற்றும் மகள் பலமுறை என்னிடம் வந்துள்ளனர். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூறினர். அவர்களை எனது இல்லத்திற்குள் அழைத்துச் சென்று அது தொடர்பாக விசாரித்தேன். உபகாரம் செய்த எனக்கும் தாயும், மகளும் அபாண்ட பழி சுமத்தி உள்ளனர். இருப்பினும் வழக்கு என்னவென்றாலும் அதனை எதிர்கொள்வேன். இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றார். இதற்கிடையில் எடியூப்பா மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் கர்நாடக மாநிலம் முழுவதும் அரசியலில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டு வந்திருப்பது ஏன் இது ஏதோ அரசியல் சதியாக இருக்கலாம் என்று பிஜேபி தரப்பில் கூறப்படுகிறது. எடியூரப்பா மீதான இந்த பாலியல் புகார் விவகாரத்தை நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் இப்போது நமது பிரச்சார ஆயுதமாக பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எரியூரப்பா மீதான இந்த பாலியல் புகார் பிரச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் என்று கூறப்படுகிறது.