எடியூரப்பா வலியுறுத்தல்

பெங்களூர் ஜூன் 20-
இதற்கு முன் மன்னர்கள் நாட்டை காக்க போராடினர். நாம் பெட்ரோல், டீசல், தண்ணீருக்காக போராடுகிறோம்.எனவே அனைவரும் மண்ணைக் காக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தினார்.
பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நேற்று சத்குரு ஜக்கி வாசுதேவின் மண்ணை காப்போம் இயக்க பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடயூரப்பா, அமைச்சர்கள் நாகேஷ், சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது எடியூரப்பா பேசுகையில், உலகம் முழுக்க வெள்ளம் பேரழிவு இயற்கை சமநிலை யின்மை, நாகரிகம் அதிகரிக்கிறது.
இதனால் சுத்தமான காற்று கிடைப்பதில்லை. காற்று, தண்ணீருக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் மன்னர்கள் நாட்டை காக்க போராடினார்கள். நாம் பெட்ரோல் டீசல் தண்ணீருக்காக போராடுகிறோம். எனவே, அனைவரும் மண்ணைக் காக்க வேண்டும் என்றார்.