எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

பெங்களூர், நவ.24- சொத்துக்கு ஒழிப்பு வழக்கில் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை சி.பி.ஐ. விசாரணை நடத்த முந்தைய பிஜேபி அரசு வழங்கிய ஒப்புதலை இப்போதைய காங்கிரஸ் அரசு ரத்து செய்து உள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து . இது அரசியல் அமைப்பு மீதான தாக்குதல் என்றும் தமது கட்சியை சேர்ந்தவரை காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் டி கே சிவகுமார் சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் கர்நாடக காங்கிரஸ் அரசு தான்தோன்றித்தனமாக சட்டத்தை மதிக்காமல் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது இதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜனநாயக அடிப்படையில் சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று பிஜேபி மற்றும் ஜனதா தளம் கட்சிகள் தெரிவித்துள்ளன. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கு மற்றும் ஹவாலா பண பரிமாற்ற வழக்கு என்று என்று துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் மீது பல்வேறு விசாரணைகள் நடந்து வருகிறது. இந்திரணையில் கடந்த பிஜேபி ஆட்சியில் இவர் மீதான பிடி இறுகியது. இவர் மீது சிபிஐ விசாரணை நடத்த அப்போதைய பிஜேபி அரசு அனுமதி அளித்தது இந்த நிலையில் நேற்று கூடிய கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் டி கே சிவகுமார் மீதான சிபிஐ விசாரணைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான 5 ஆண்டு காலத்தில், சிவக்குமாரும் அவரது குடும்பத்தினரும் வருமானத்தைவிட கூடுதலாக ரூ.74 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி டி.கே.சிவக்குமார் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து, வழக்கை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நடராஜன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவக்குமார் காலதாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சிபிஐ பெரும்பாலான விசாரணையை முடித்துவிட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், சிவக்குமார் மீதான வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டார். அதேவேளையில், விசாரணையை 3 மாதத்திற்குள் முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டார். இதனால், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு சிக்கல் ஏற்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் மீதான சிபிஐ விசாரணைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை ரத்து செய்ய கர்நாடக மந்திரி சபை கூட்டம் ஒப்புதல் அளித்து இருப்பது கர்நாடக அரசியலில் பல்வேறு விவாதங்களை கிளப்பி உள்ளது.கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் ஜனதா தளம் எஸ் கட்சி தலைவருமான குமாரசாமி கர்நாடக மாநில பிஜேபி தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட இரண்டு கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு உள்ளனர்