மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

புதுடெல்லி, ஆக.10-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை ஆற்றினார். தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. உனக்காக இந்த விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மணிப்பூரில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில் தீர்மானம
எமது கூட்டணிக்கு ஒரு நல்ல சகுனம். எதிர்க்கட்சிகள் நோ பால் வீசுகின்றன ஆனால் நாங்கள் சிக்ஸர் அடிக்கிறோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். தேச நலன் மற்றும் ஏழைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை அவர்களுக்கு அரசியல் அதிகாரம் ஒன்றே குறி என்றும் பிரதமர் கடுமையாக விமர்சனம் செய்தார்